GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன் தினம் ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், வார தொடக்கமான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒருகிராம் ரூ.14,780-க்கு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.