திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆகஸ்ட் 22 -ஆம் தேதி கழக ஆக்கப் பணிகள் குறித்து தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22-08-2026 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருள் : கழக ஆக்கப் பணிகள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




