கறி விருந்துக்கு மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் வெட்டிக் கொலை

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்குச் சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செய்த மாமனாரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு மகன்…

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்குச் சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செய்த மாமனாரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு மகன் முத்தரசன் (23), அதே திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதியில் உள்ள மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்திற்கு, முத்தரசன் தனது மனைவியுடன் சென்றுள்ளார். விருந்தில் பங்கேற்ற அவர், அங்கேயே தங்கியுள்ளார். ஆனால், யாரும் எதிர்பார விதமாக புதுமாப்பிள்ளை முத்தரசன் மாமனார் வீட்டின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘ஜூன் 23ல் அறிமுகமாகிறது ரியல்மி டெக்லைஃப் R100 வாட்ச்’

முத்தரசன் சடலத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் முத்தரசன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், முத்தரசன் அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்துப் பேசியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் மருமகன் முத்தரசனை வெட்டி கொலை செய்ததது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.