அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “புனித ரமலான் மாத நோன்பு தொடங்கியுள்ள இந்த புனித நாட்களில், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
ஈகையின் வழியில் நம்மை நடத்தும் இவ்வருள்மிகு காலத்தில், நோன்பு நோற்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்பட்டு, உங்கள் இல்லங்களில் அமைதி, நலன் மற்றும் வளம் பெருகட்டும்.
ஈகை, பரிவு, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த மனிதநேயப் பண்புகள் நம் சமூகத்தில் மேலும் வேரூன்றி வளர இந்த ரமலான் மாதம் வழிவகுக்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







