சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் தீவிர பறக்கும் படையை அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப் புறம்பான கழிவுநீர் இணைப்புகளைத் துண்டிக்க மண்டல அளவில் முதன்மைப் பொறியாளர் தலைமையில் குழு அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் உதவி முதன்மைப் பொறியாளர், உதவி அல்லது இளநிலைப் பொறியாளர், மின்சாரத் துறையின் உதவிப் பொறியாளர், சாலைப் பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை உள்ளடக்கி குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘கறி விருந்துக்கு மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் வெட்டிக் கொலை’
மேலும், இந்த குழு ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு சனிக்கிழமையும் தலைமைப் பொறியாளரிடம் குழு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும், அறிக்கை மாநகராட்சி ஆணையரால் ஆய்வு செய்யப்படும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.