ரியல்மி டெக்லைஃப் வாட்ச் R100 ஜூன் 23 அன்று மதியம் 12:30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி டெக்லைஃப் R100, SZ100 வாட்ச், இதில், R100 வாட்ச் 1.32 இன்ச் கலர் டிஸ்ப்ளே மற்றும் புளூடூத் அழைப்பு அம்சத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஒரு வட்ட வடிவ டயலை வெளிப்படுத்தும் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. Realme ஜூன் 23 அன்று மதியம் 12:30 மணிக்கு Realme Techlife Watch R100 ஐ அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், Flipkart வழியாக விற்பனைக்கு வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஆப்கனில் சாலையோரம் சமோசா விற்கும் செய்தி வாசிப்பாளர்’
இதற்கு முன்பு ரியல்மி டெக்லைஃப் SZ100. ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,499 வெளியானது. இது, லேக் ப்ளூ மற்றும் மேஜிக் கீரே வண்ணங்களில் அறிமுகமானது. 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளேவுடன் வந்தது. இது தோலின் வெப்பநிலையை அளவிடுவதற்கு சென்சார்கள் பொருத்தப்பட்டது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரியல்மி டெக்லைஃப் R100-ன் விலை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ரியல்மி டெக்லைஃப் SZ100 விடக் குறைவாக இருக்கலாம் அல்லது ஒத்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.