”திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது”- நயினார் நகேந்திரன்!

திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன்! எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் பாஜக மற்றும் அதிமுக சார்பாக பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி  இன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன்  திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அயராது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில்,

“திராவிட மாடலின் நிர்வாகத்தை எதிர்த்தும், பொள்ளாச்சி வாழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் விதமாகவும் சிறப்பாக போராட்டத்தை முன்னெடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு எனது வாழ்த்துகள்!

தமிழகத்தை சீர்குலைக்கும் திமுக அரசை எதிர்த்து இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டம் வெறும் ஆரம்பப் புள்ளியே. இதே போன்று தொடர்ந்து பல அறவழிப் போராட்டங்களின் வழி தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசால் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் வெளிக்கொணரப்படும். மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும். முன்னேற்றத்தைத் தடுக்கும் திராவிட மாடல் அரசை ஒட்டுமொத்தமாக அகற்றும் வரை எங்கள் கூட்டணி அயராது” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.