2 ஆண்டுகளுக்கு பின் …… எகிப்து உடனான காசா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

எகிப்து உடனான காசாவின் ராஃபா எல்லையை இஸ்ரேலின் ராணுவமானது சுமார் இரண்டாண்டுகளுக்கு பின் நாளை திறக்கிறது.

இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையேயான போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதி ஒப்பந்தத்தின் வாயிலாக கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவிற்கு வந்தது. இதனை தொடர்ந்து காசாவில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

போரின் போது எகிப்து உடனான காசாவின் ராஃபா எல்லையை இஸ்ரேல் மூடியது. எகிப்து வழியாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள் கடத்தப் படுவதை தடுக்க ரஃபா எல்லை மூடுவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இந்த நிலையில் சுமார் இரண்டாண்டுகளுக்கு பின் எகிப்து உடனான காசாவின் ராஃபா எல்லை நாளை திறக்கப்படும் என்று இஸ்ரேலின் ராணுவப் பிரிவான கோகாட் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரஃபா எல்லையின் வழியாக இஸ்ரேல் மற்றும் எகிப்து அதிகாரிகளின் முறையான சோதனைகளுக்குப் பிறகு பாலஸ்தீனர்கள் மீண்டும் காசாவுக்குள் செல்வதற்குஅனுமதிப்பார்கள் என்றும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.