“என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” மாநாடு தொடங்கியது!

மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெற்கு மண்டல தேர்தல் கலந்துரையாடல் மாநாடு தொடங்கியது.

மதுரை உத்தங்குடி கலைஞர் திமுகவின் தெற்கு மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்ற “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” எனும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கனிமொழி, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, ராஜ கண்ணப்பன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தெற்கு மாவட்டத்தில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1,98,000 வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு குடிநீர், இருக்கை, உணவு என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு ஸ்கேன், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.