அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கடந்த ஐந்தாண்டு ஆட்சியால் மக்கள் படும் இன்னல்களை இல்லந்தோறும் கொண்டுசேர்க்கும் விதமாக, விடியா ஆட்சி வீட்டுBillலே சாட்சி என்ற பெயரில் PunishmentBill வழங்கி மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தும் பிரச்சாரம் கடந்த 28.01.2026 முதல் நடைபெற்று வரும் நிலையில்,
இதுவரை 1.04 கோடி குடும்பங்களை நாம் சென்று சேர்ந்துள்ளோம்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பூத்களிலும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏதுவாக, அச்சுப்பொறி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5,30,000 இந்த திமுக ஆட்சியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.20 கோடி குடும்பங்களுக்கு கணக்கிட்டால், ஒட்டுமொத்தமாக ரூ. 11,66,000,00,00,000 (பதினோரு லட்சத்து அறுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரும் முன்னெடுத்துச் செல்லும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு குடும்பத்தினரும் திமுக ஆட்சியால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் துயரங்களையும் பகிர்வது, இனியும் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்ற சூளுரையின் முன்னோட்டமே”! இவ்வாறு அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.







