“முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்” – அண்ணாமலை!

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனிடையே முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன. பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.