கொடுமுடி அருகே திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம்! – பயணிகள் அதிர்ச்சி!!

கொடுமுடி அருகே அரசு பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் கழண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் கவனமாக பேருந்தை இயங்கி வந்ததால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் , கொடுமுடி…

கொடுமுடி அருகே அரசு பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் கழண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் கவனமாக பேருந்தை இயங்கி வந்ததால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் , கொடுமுடி அடுத்த மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பாசூர் செல்லும் அரசு பேருந்தை ஒட்டுநர் கதிர்வேல் இயக்கி வந்துள்ளார். இதையடுத்து பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 8 பேர் பயணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சோளங்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரங்கள், ஸ்பிரிங் கட்டாகி கழண்டுள்ளன. இதை அறிந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக பேருந்தை இயங்கி பெரும்  விபத்துக்கு  உள்ளதாவதை தவித்துள்ளார்.

மேலும்  பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ளது. இதை அடுத்து பணிமனையில் இருந்து விரைந்து வந்த  ஊழியர்கள் பேருந்தை சரி பார்க்க எடுத்து சென்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.