திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தத் பதிவில், “கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.
2024 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




