லடாக்கில் நிலநடுக்கம் – 5.5 ரிக்டர் அளவாக பதிவு!

லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லடாக் பகுதியில் இன்று காலை 6.05 மணிக்கு திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக் பகுதியில் லே நகரில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும், பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. கார்கிலிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதைதொடர்ந்து, லடாக் மாநிலம் லே பகுதியில் இன்று காலை 9.54 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.