GOLD RATE | தங்கம் விலை மேலும் சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கும் விற்பனையானது. தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையில் குறைந்து காணப்படுகிறது. அதான்படி சென்னையில் வெள்ளி இன்று 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.245-க்கும், 1 கிலோ ரூ.5000 குறைந்து ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதனை தொடர்ந்து, மாலையும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் ரூ.800 குறைந்து, ரூ.1,09,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,45,000-க்கும் ஒரு கிராம் ரூ. 245-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.