தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் வைக்கோல் கட்டுகளில் பற்றிய தீ!

கிருஷ்ணகிரி அருகே, தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பற்றியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் டெம்போ வாகனத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி…

கிருஷ்ணகிரி அருகே, தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் தீப்பற்றியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டியைச் சேர்ந்தவர்
சிவப்பிரகாசம். இவர் டெம்போ வாகனத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி விற்பனை செய்வதற்காக நல்லப்பநாய்க்கனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்று கொண்டிருந்த மின் கம்பி வைக்கோல் கட்டுகளில் உரசியதில்,
வைக்கோல் தீப்பற்றி எரிய துவங்கியது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 10க்கும் குறைவான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது. பொதுமக்களின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.