“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்”

கேலியின் அடையாளமாக கருதப்பட்ட விசிலுக்கும் இசையில் இடமளித்து மகிழச்செய்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி அந்தக்கால திரையிசைப்பாடல்கள் பாமரனுக்கு புரியாத வகையில் இருந்தாலும் ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்து வந்தது. பின்னர் கர்நாடக…

கேலியின் அடையாளமாக கருதப்பட்ட விசிலுக்கும் இசையில் இடமளித்து மகிழச்செய்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி

அந்தக்கால திரையிசைப்பாடல்கள் பாமரனுக்கு புரியாத வகையில் இருந்தாலும் ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்து வந்தது. பின்னர் கர்நாடக சங்கீத ராகம் மாறாமல் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பாடல்கள் இடம்பெறும் காலம் தொடங்கியது. இதன் காரணமாக தமிழ் திரையுலகுக்கு வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி, தென்றேலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் போன்ற வரிகள் கிடைத்தன.

பாவை விளக்கு திரைப்படத்தில் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்ற பாடலை கே.வி. மகாதேவன் இசையில் சிவாஜி முதல் வரிகளை வசன நடையில் கூற தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடிய அந்த பாடல் அப்போதைய ஹிட் பாடலாகும். ராஜராஜ சோழன் திரைப்படத்தில் தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் என்ற பாடலை சிவாஜி கணேசன் சொந்த குரலில் ராகத்துடன் கூற அவருக்கு துணையாக டி.ஆர். மகாலிங்கம் பாடலை பாடியிருப்பார்.  நண்பர்கள் சந்திக்கும்போது மூச்சிரைத்தபடி பாடல் வரிகளான அந்த நாள் ஞாபகம் பாடலின் முதல்வரியை சிவாஜி பாடியிருப்பார். டி.எம்.எஸ் அவருக்கு பின்னர் குரல் கொடுத்திருப்பார்.


கேலியின் அடையாளமாக கருதப்பட்ட விசிலுக்கும் இடமளித்து மகிழச்செய்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி. பார் மகளே பார் திரைப்படத்தில் நீரோடும் வைகையிலே என்ற பாடலை முதலில் விசிலின் ஒலியை கொண்டு தொடங்கியிருப்பார்கள் . தொழில்நுட்பம் இல்லாத அந்தக்காலத்திலும் விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கும் உரிய மரியாதையை பெற்று தந்தது அந்த பாடல்.


படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடலை டி எம் சௌந்தரராஜன் பி.பி ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடி இருப்பார்கள். டி எம் எஸ் குரலில் உச்சமும் மெல்லிய குரலில் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடுவதற்கு ஏற்ற வகையில் வரிகளும் இசையும் அமைந்திருக்கும். கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலாவின் கீதம் இசைத்த காலம் அது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.