நெல் கொள்முதலுக்கு மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் – திமுக ஊராட்சித் தலைவரின் கணவர் மீது விவசாயிகள் புகார்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு 80ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை பெற்றுக்கொள்வோம் என திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு 80ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை பெற்றுக்கொள்வோம் என திமுகவை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கூறிவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராமனுஜபுரம்,சிவன் கூடல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னதாக விளைவிக்கப்பட்ட நெல்லை விவசாயிகள் அறுவடை செய்து அப்பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் இருபது நாட்களை கடந்தும் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் இதுவரை வரவில்லை.

இதனால் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் திடீரென மழை பெய்தால் சேதமடையும் அபாயம் உள்ளது. மேலும் இங்குள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவரின் மூலமாக மூட்டைக்கு 80 ரூபாய் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தாண்டு பொய்த்து போன மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் அவர்களை மேலும்
மன உலைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து நமது செய்தியாளர் தரப்பில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தொடர்பு கொண்டபோது,சிப்பத்திற்கு 40 ரூபாய் வாங்குகிறோம் மூட்டை ஏத்துற கூலி யார் தருவார்கள்? நாங்கள் வேண்டுமானால் உங்களுக்கு 30 ரூபாய் தருகிறோம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்.

மேலும் அரசு சார்பில் மூட்டைக்கு பணம் வாங்க சொல்லவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.இரவு நேரங்களில் ஏன் கொள்முதல் செய்கீறிர்கள் என்று கேட்டதற்கு பகல் வெயிலில் நீயா வேலை என்றும் கேட்டுள்ளார். எனவே அரசு அதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையீட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.