திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் பேசிய தமிழிசை செளந்தரராஜன்,
”2026ல் பாஜக ஆட்சி அதிமுக கூட்டணி கோட்டைக்கு செல்லும். கீழடியை நாம் மறைக்கிறோம் என அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்கிறார். தமிழின் தொன்மையை நமது பிரதமரை விட யாரும் வெளிக்காட்டியிருக்க முடியாது.
ஜிஎஸ்டிக்கு காரணமான நமது நிதியமைச்சர் மூலம் தான் கீழடி பணியை நிதி ஒதுக்கி தொடங்கினார்கள். ஆனால் நமக்கு கருப்பு கொடி காட்டினார்கள். கீழடியால் உலகத்திற்கு வழி காட்டுவோம். கீழடிக்கும் மகாபாரதத்திற்கும் இணைப்பு உள்ளது. அதை நிருப்பிப்போம். கலாச்சார போரை நாம் தொடங்குவோம்.
நாம் 2026ல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஊழல் ஆட்சி, முறைகேடு செய்யும் அமைச்சர்கள், மாநகராட்சியில் ஊழல் இப்படியோ எத்தனையோ அவலங்கள் இந்த ஆட்சியில் உள்ளது. நீர் நிறைந்த குளத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும். தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும்” என்றார்







