நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு அளித்திடுவர் என மக்களவை உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பிற்கு திமுக ஆட்சியில் முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மற்ற மாநிலங்களில் ஓட்டுக்காக சாதி மதம் மூலம் பிரிவினைவாதம் ஏற்படுத்தி ஆட்சி புரிந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்தது தரப்பினரையும் ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்து வருவதாகவும் கனிமொழி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சாத்தார் அருகே சிப்காட் உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என திமுக எம்.பி.கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியளித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் திமுக சார்பாக போட்டியிடும் 24 வேட்பாளர்களை ஆதாரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்தி: நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தங்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு, தீர்வு காண தனித்துறை அமைக்கப்பட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் என்று பெறுமிடத்துடன் அவர் குறிப்பிட்டார். மேலும், நமது உரிமைக்காக தொடர்ந்து முதல்வர் குரல் கொடுத்து வருகிறார் எனவும் அவர் பேசினார்.
நேற்றைய (10-02-2022) நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு. pic.twitter.com/PcnaqAzVTu
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 11, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.