முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!

எதிர்கட்சித்தலைவர்களின் ஆப்பிள் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்து சர்ச்சையான நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவன தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவேசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், பெரும்பாலும் ஹேக்கர்களும் ஆப்பிள் போன்களை குறிவைத்தே ஹேக்கிங் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு திடீரென ஹேக்கர்கள் டார்கெட் செய்வதாக ஒரு அலார்ட் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், சிவசேனாவின்(உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி எம்பி  ராகவ் சத்தா, காங். செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, AIMIM கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி,  தி வயர் செய்தி இணையதள ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோர் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை அலார்ட் வந்துள்ளதாக அது பற்றிய ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவிட்டுள்ளனர்.

அந்த அலார்ட்டில், அரசாங்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் உங்கள் செல்போனை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எம்.பிக்கள் மட்டுமன்றி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் 3 பேருக்கும் இதேபோன்ற அலார்ட் வந்திருப்பதாக கூறப்படுகிறது. மஹுவா மொய்த்ரா வெளியிட்டு உள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் threat-notifications@apple.com என்ற ஈ மெயில் முகவரி மூலம் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பது தெரிகிறது. சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் இதை பகிர்ந்து, “உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எனக்கூறி, இது குறித்து விசாரிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஐபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் கூறியிருப்பதாவது:

அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பார்கள். எனவே, அதுபோன்ற தாக்குதல்களை அச்சுறுத்தல் சிக்னல்கள் மூலம் கண்டறிவது என்பது அடிக்கடி முழுமையற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதில் அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பு குறித்து சில எம்.பி.க்கள் மற்றும் சிலரிடமிருந்து வந்த தகவல்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த பிரச்சினையில் ஆப்பிள் வழங்கும் பெரும்பாலான தகவல்கள் தெளிவற்றதாகஉள்ளது. அரசு அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் எனவும், ஆப்பிள் தரப்பில் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“பிரதமருடனான சந்திப்பு மன நிறைவாக அமைந்தது” – முதலமைச்சர் ஸ்டாலின்!

Halley Karthik

கண்ணீர்…ஆறுதல்…வைரலான பாஜக நிர்வாகியின் டிவிட்…

Web Editor

”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

Janani

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading