வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் – மீட்கும் பணியில் இந்திய ராணுவம்!

முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தென் மாவட்டங்களின் நிலவரம் – டெல்லியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.!

பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவபுரத்திற்கு அருகே உள்ள முறப்பநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.  இந்திய ராணுவம் உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் களத்தில் இறங்கி உள்ளது.  முதற்கட்டமாக முறப்பநாட்டில் உள்ள மக்களை மீட்டு வசவப்பபுரம் கொண்டு வந்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.