ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை…

ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மண்ணடி உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு, பட்டாளம்,  ஜெய் நகர், தி.நகர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆல் இந்தியா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் பென்ஷனர் அசோசியேசன் கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகம், வேப்பேரி ரித்தர்டன் சாலை, கோபாலபுரம் ரத்னா தெரு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.