காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்

கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட சண்டையில் காதல் மனைவியை வெட்டிக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதல் கணவனை கைது செய்து போலீச விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம்…

கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட சண்டையில் காதல் மனைவியை வெட்டிக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதல் கணவனை கைது செய்து போலீச விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம் என்ற பகுதியில் சாக்கு மூட்டையில்
சடலம் இருப்பதாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்ததில் வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பருடைய மகன் ஹவுசிக்பாண்டி 27. இவருடைய மனைவி கீழதிப்பம்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்பது தெரியவந்தது.

இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துக் கொண்டனர்கள். இவர் கெண்டைகவுண்டனூர் அருகே கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டீஸ்வரி சகோதரிக்கு திருமணத்திற்காக பணம் கேட்டதால்  ஹவுசிக்பாண்டிக்கும், பாண்டீஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஹவுசிக் பாண்டி ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதல் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்து பாண்டீஸ்வரி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.  பின்னர் உயிரிழந்த பாண்டீஸ்வரியின் சடலத்தை ஹவுசிக்பாண்டி சாக்குமூட்டையில் மூட்டைகட்டி பூலாங்குளம் என்னும் பகுதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளார்.

மரணமடைந்த பாண்டீஸ்வரி என்பவர் ஹவுசிக்பாண்டியை திருமணம் செய்வதற்கு முன்பாக அமல்ராஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், அமல்ராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி அவரது மனைவி 9 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் , பாண்டீஸ்வரியும், அமல்ராஜ் ஆகியோர் சேர்ந்து 9 மாத கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்ததாக வழக்கு தற்போது வரை கூம்பூர் காவல் நிலையத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் விசாரணை செய்து சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். கொலை செய்த ஹவுசிக்பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் மனைவியை கணவனே சரமாரியாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி தூக்கி வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.