விடுமுறை நாளான இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா
பயணிகள், பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்தும் இதமான காலநிலை அனுபவித்தும் பூங்காவினை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு
அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா
பயணிகள் நீலகிரி வருகை புரிந்து நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா
தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஞாயிறு விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில்
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு
வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
இதனை தொடர்ந்து பூங்காவில் உள்ள புல்வெளி மைதானம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்களை கண்டு ரசித்தும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து மகிழ்ந்தனர் மேலும் உதகையில் நிலவிவரும் இதமான காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
மேலும் இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், உதகையில் நிலவிவரும் இதமான
காலநிலையை அனுபவித்தும் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்களை கண்டு ரசிப்பது மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.