எனது தாயாரின் உடல்நலம் தேற வேண்டும் என்று தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மனமார்ந்த நன்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவனின் தாயார் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனின் தாயார் விரைவில் குணமாகி மீண்டு வந்து திருமாவளவன் மீது அன்பை பொழிய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து தொல். திருமாவளவன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
அம்மாவின் உடல்நலம் தேறிட அகம் நெகிழ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அன்புக்குரிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மனமார்ந்த நன்றி. கட்சி அரசியலைக் கடந்து கனிவைக் காட்டும் பண்பு போற்றுதலுக்குரியது. அவருக்கு எனது வாழ்த்துகளும்..நன்றியும்.. என்று குறிப்பிட்டுள்ளார்.








