முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சந்தேகத்தின் பெயரில் மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவன் கைது!

சூளைமேட்டில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 31) 10 வருடத்திற்கு முன்பு பாரதி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், அவரது மனைவி பாரதி நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்குச் செல்லக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். மனைவி செல்லும் இடத்தினை பின் தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்ட பழனி மனைவியைத் தாக்கிவந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம்; திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்’

இந்நிலையில், நேற்று மீண்டும் மனைவி மீது சந்தேகமடைந்த பழனி மனைவி வேலை செய்யும் கடைக்குச் சென்றுள்ளார். அங்கே, மூன்றாவது மாடி கழிவறைக்குச் சென்ற மனைவி பாரதியை பின் தொடர்ந்து பழனி, மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாரதியைத் தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து பாரதி மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாக பாரதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாரதி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பழனியைக் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்

Arivazhagan Chinnasamy

பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா

Mohan Dass