உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம்; திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், உப்பு…

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,000/- நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உப்பு நிறுவனம், பொது மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறும் பொருட்டு, அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு மற்றும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றை பொது விநியோக திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையிலும், மதிய உணவுத் திட்டத்திற்கும் விற்பனை செய்து வருகின்றது.

அண்மைச் செய்தி: ‘’மாணவர்களின் விளையாட்டு திறனைக் கண்டறிய WBTST செயலி’ – பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு உப்புக் கழகம் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நெய்தல் உப்பு” என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாயமான விலையில் வெளிச்சந்தையில் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.