முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா சட்டம்

நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

’வி ஹவுஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தொடர்ந்த வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட, எஸ்.எஸ்.ஐ தயாரிப்பு நிறுவனத்துடன் ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தொகையில் ரூ.27 லட்சத்தையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில்,
பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிடக் கூடாது. அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் தரப்பில், நிலுவையில் உள்ள தொகையை 90 நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik

“பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமி

Jayapriya

‘சீரான முறையில் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

Arivazhagan Chinnasamy