முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறை அலுவலர் தேர்வு தேதி மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சிறை அலுவலர் தேர்வு வரும் 26ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அறிக்கையில் டிசம்பர் 22 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என எழுத்து/ கணினி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறை அலுவலர் பணிகள் தேர்வு டிசம்பர் 26 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர் ,தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம் ,ராமநாதபுரம் ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை,நாமக்கல், பெரம்பலூர் ,புதுக்கோட்டை ,சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ,அரியலூர் ,செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழி தேர்வு நடைபெறும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

எல்.ரேணுகாதேவி

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் – முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

EZHILARASAN D

கண்டங்களைத் தாண்டி மலர்ந்த காதல்

G SaravanaKumar