உயிருக்கு போராடிய நபரை 2 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவலர்!

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய விவசாயியை, போலீசார் ஒருவர் 2 கி.மீ தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் பெத்திகல் கிராமத்தில் குரு சுரேஷ்…

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய விவசாயியை, போலீசார் ஒருவர் 2 கி.மீ தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் பெத்திகல் கிராமத்தில் குரு சுரேஷ் என்பவர் குடும்ப தகராறு காரணமாக பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வயலில் மயங்கி கிடந்த சுரேஷை பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் அவரச உதவி எண் 100ஐ தொடர்புக் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கான்ஸ்டபிள் ஜெயபால் மற்றும் சம்பத் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். வயலில் மயங்கி கிடந்த சுரேஷை 2 கி.மீ தூரத்திற்கு வயல், வரப்புகளை தாண்டி தனது தோளிலேயே சுமந்து சென்று அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இவரின் இந்த உடனடியான நடவடிக்கையால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு சுரேஷின் உயிர் காப்பாற்றப்பட்டது. காவலர் ஜெயபாலின் இந்த செயலை காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.