மணப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மணமகன்!!

ஜெய்ப்பூரில் மணப்பெண்ணுக்கு மணமகன் ஒருவர் அளித்துள்ள பரிசு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலரும் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது உண்டு. அதே நேரம் மணமகன்…

ஜெய்ப்பூரில் மணப்பெண்ணுக்கு மணமகன் ஒருவர் அளித்துள்ள பரிசு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலரும் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது உண்டு. அதே நேரம் மணமகன் மணப்பெண்ணுக்கும், மணப்பெண் மணமகனுக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக எதிர்பார்க்காத பரிசுகளை அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஜெய்ப்பூரில் மணமகன் ஒருவர் மணப்பெண்ணுக்கு அளித்த பரிசு மணப்பெண்ணை மட்டுமல்லாது, காண்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணப்பெண்ணுக்காக நடனமாடிய மணமகன், முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மணமக்களுக்கு திருமண வாழ்த்து கூறும் ’வாய்ஸ் நோட்’-ஐ வெளியிட்டார். இதுகுறித்த வீடியோவை ’தி க்ரிம்சன் சர்க்கிள்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “என்.எல்.சி-க்கு எதிரான போராட்டம் தொடரும்” – நியூஸ்7 தமிழுக்கு அன்புமணி ராமதாஸ் பிரத்யேக பேட்டி

மேடையில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் வடிவிலான திரையில் ஷாருக்கானின் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை மணமகன் ஏற்க, அதில் ஷாருக்கான், “வணக்கம் கின்னரி. வணக்கம் சஞ்சீத். இது ஷாருக். உங்களுக்கு திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒன்றாக, மகிழ்ச்சியாக, அன்புடன் இருக்க வேண்டும்….” என்று கூறுகிறார்.

இதனை கேட்டதும் மணப்பெண் வியப்பில் ஆழ்ந்து போக, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ஆரவாரம் செய்கின்றனர். தொடர்ந்து ஷாருக்கானின் பாடல் ஒன்றுக்கு மணமகன் நடனமாடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 6.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற அந்த வீடியோ, 64,500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.