கில், கோலி சிறப்பான ஆட்டத்தால் ஆஸிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவாஜா, க்ரீன் சதமடித்த அசத்தியிருந்தனர். இந்திய அணித்தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி நல்ல ஓப்பனிங் கொடுத்தனர். ரோஹித் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிராக சதம் – அசத்தும் சுப்மன் கில்
அதன் பிறகு புஜாராவுடன் இணைந்து கில் சிறப்பாக ஆடினார். கில் சதமடித்து அசத்தினார். கில் – கோலி ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கில் 128 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி – ஜடேஜா ஜோடி களத்தில் ஆடி வருகிறது. சிறப்பாக ஆடிய கோலி அரைசதமடித்து அசத்தினார். 3ம்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, ஆஸியை விட இன்னும்191 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தப் போட்டியின் மூலம் கோலியும் சில சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அடிக்கும் 29வது அரைசதம் இது. மேலும் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கோலி 4,000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் டெண்டுல்கர், டிராவிட், கவாஸ்கர், சேவாக் ஆகியோருடன் கோலியும் 4,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-ம.பவித்ரா