”விடுதலை படத்தின் வலியை, மக்கள் தங்களது வலியாக கருதியதுதான் பெரிய வெற்றி “ என நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேனாம்பேட்டை ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்ததாவது..
” இந்த டத்தை நாங்க கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம் என சொல்லவில்லை. உண்மையான படத்தை எடுக்க வேண்டும் என இப்படத்தை முயற்சித்தோம். இந்த படத்தின் முதல் காட்சியின் வெளியான போது ஊடகங்களே இதனை எடுத்து சென்று கொண்டாட வேண்டும் என நினைப்பது தான் படத்தின் முதல் வெற்றி.
இதனையும் படியுங்கள்: விடுதலை படத்தின் வெற்றி விழா : கண்கலங்கியபடியே நன்றி தெரிவித்த நடிகர் சூரி
படத்தில் சில குறைகள் உள்ளது. எல்லா ஊடகங்களும் இந்த படத்திற்கு ஆதரவு தருகின்றனர். மக்கள் இதை அவர்களுடைய என படம் என நினைத்து கொண்டாடுகின்றனர். படத்தின் இடம்பெற்றுள்ள வலியை அவர்களுடைய வலியாகவும் அவர்களுடைய படமாகவும் பெருமைப்படுவதால் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். உதயநிதி படம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார். நல்லவர்களை கதையின் நாயகனாக பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது. நாங்களே அப்படியான படங்களை எடுப்பதில்லை. அப்படி நல்லவர்களை கதையின் நாயகனாக வைத்து இரண்டாம் பாகம் கேட்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனையும் படியுங்கள்: இந்த வெற்றிக்கு பிறகுதான் சூரி கவனமாக இருக்க வேண்டும் – விஜய் சேதுபதி அட்வைஸ்
இந்த படத்தை பார்த்துவிட்டு இளையராஜா சார் தான் முதன் முதலில் இது பெரிய படமாக வரும் கொண்டாடப்படும் என்று சொன்னார். “ உனக்கு என்ன வேண்டும் சொல்லு நான் பண்ணி தரேன் ” என அவர் கூறினார். இந்த படத்திர்கு குறைந்த நாட்கள் தான் நான் கொடுத்தேன். அதையும் சிறப்பாக செய்து கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் சிறப்பு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.” என வெற்றிமாறன் தெரிவித்தார்.
– யாழன்







