தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மின்சார தலைமை அலுவலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கடந்த சில நாட்களாக மின்சாரத் துறையில் செய்யப்பட வேண்டிய செயல்முறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். டெண்டர் முறையில் பின்பற்றப்படும் நடைமுறை, நிலக்கரி எங்கிருந்து வாங்கப்படுகிறது என்று எல்லாம் ஆய்வு செய்கிறோம். அதில் எங்கு எல்லாம் தவறு விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதோ அதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த வித முறைகேடுகள் இல்லாமல் லஞ்சம் இல்லாமல் செயல்படும்.
சில நாட்களாக ஏற்படும் மின்தடை பற்றிய கேள்விக்கு, 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. என்ன காரணங்களால் தடைபடுகிறது என்று சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மின்சார வாரியத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதை முழுவதும் அடிப்படையில் இருந்து சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடக்கும். சஸ்பென்ட் செய்த நபர் மீது பல குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற நபர்கள் இந்த வளாகத்திற்குள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் நிர்வாக சீரமைப்பு செய்ய வேண்டும். மறைமுக டீலிங் இருக்காது. யாரும் துண்டு சீட்டில் எழுதி குடுத்து செயல்பட முடியாது. டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணை முடிந்து யார் மீது குற்றம் இருந்தாலும், தவறு செய்திருந்தாலும் முன்னாள் அமைச்சராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்ட சீரமைப்பு செய்யப்படும். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் வரை தான் பணியாற்றி வருகிறார்கள். மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை, அரசாக முன்னெடுத்து மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கனவே இருக்கும் நடைமுறை மாற்றம் இல்லை. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு நான் எந்த விதிமீறல் செய்யவில்லை. அவர்களிடம் நடை சாத்தும் நேரம் கேட்டு தான் சென்றோம். இனிமேல் எந்த புரோக்கருக்கும் இந்த அலுவலகத்தில் வேலை இல்லை. பெரிய அளவில் மின் பயன்பாடு உயர்வு இல்லை. ஒரு சில தனி நபர்கள் பயன்படும் வகையில் டிரான்ஸ்வர்கள் செய்யப்பட்டுள்ளது. துண்டு சீட்டு இல்லாமல் வெளிப்படையாக டிரான்ஸ்வர்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.







