பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நொறுங்கி விழுந்த கட்டடத்தின், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.  அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த…

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நொறுங்கி விழுந்த கட்டடத்தின், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 

அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த துருக்கி தேசமே உருக்குலைந்துள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் உள்ள காசியண்டெப் நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவுக்கு, உணவுகள், மருத்துவப்பொருட்கள், எரிபொருட்கள், மீட்பு படை விமானங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அனுப்பி வருகின்றன.

 

https://twitter.com/Miss_Oksana/status/1622715217003048960?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1622715217003048960%7Ctwgr%5Ebebfb8996ee9449b46d48b30b40f1dfac440808d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wionews.com%2Fworld%2Fmiracle-amid-devastation-baby-born-under-rubble-rescued-after-syria-turkey-earthquake-watch-559637

இந்த துயர நிகழ்விற்கு மத்தியில், நெகிழ்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்றும் அரங்கேறியுள்ளது. சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நொறுங்கி விழுந்த கட்டடத்திற்கு இடையே, கர்ப்பிணி ஒருவர் சிக்கிக்கொண்டார். இடிபாடுகளில் சிக்கிய அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மீட்புப் பணியினர் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரதிர்ஷ்டவசமாக அக்குழந்தையின் தாய் உயிரிழந்தார். குழந்தையை மீட்டு கொண்டு செல்வது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.