திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (29), கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக இருந்து வந்தார். இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த சங்கரலிங்கம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிறை வார்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற அவர், தனது கல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை காவல்துறையினர், விசாரணைக் கைதி உயிரிழந்ததற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் சூழல் குறித்து விசாரித்து வருகின்றனர்.




