இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்குகிறது..
இந்திய அணி விவரம்:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, நமன் தீர், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.




