இணையதளத்தில் வெளியான “THE FAMILY MAN” வெப் தொடரில், நடிகை சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரில் நடிப்பதற்கு சமந்தாவிற்கு மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிப்பதற்கு அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில், அதிக சம்பளம் பெறும் நடிகையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு அவர் நான்கரை கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பள விவகாரத்தில் நயன்தாராவை, சமந்தா பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்