தி ஃபேமிலி மேன் 2 தொடரை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமேசான் நிறுவனத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி உள்ளார்.
நடிகை சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உட்பட பலர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ள தொடர், ’தி ஃபேமிலி மேன் 2’. ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ள இந்த தொடரின் முதல் பாகத்துக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது உருவாகியுள்ள இரண்டாவது பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில், இலங்கை தமிழ்ப் பெண்ணாக சமந்தா நடித்துள்ள சமந்தா, மனித வெடிகுண்டாக நடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந் நிலையில், இந்தத் தொடரை அமேசான் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என அந்த நிறுவனத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி உள்ளார். அவ்வாறு நீக்கவில்லையென்றால், அமேசான் சேவைகள் அனைத்துக்கும் எதிராக பிரசாரம் நடத்தப்படும் என அந்தக் கடிதத்தில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.







