நயன்தாரா படத்தின் பாடல் நாளை வெளியீடு: அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமெர்ஷியல்…

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமெர்ஷியல் படங்களை அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடித்த அறம், டோரா, மாயா போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.

தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண். திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படம் . இந்த படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நெற்றிக்கண் படத்தின் முக்கிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இப்படத்தில் இடம்பெறும் ‘ இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடல், ஜீன் 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ஆவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.