This News is Fact Checked by NewsMobile
2021-ஆம் ஆண்டு ஹரியானா முன்னாள் முதல்வர் கட்டாரின் தலைமையிலான கூட்டத்திற்கு முன் நடந்த கலவரத்தை திரித்து தற்போது பரப்பப்படுவது அம்பலமாகியுள்ளது.
ஹரியானா பாஜக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறி, ஒரு கும்பல் தற்காலிக கட்டிடத்தை சேதப்படுத்துவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பங்கேற்ற நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தை விவசாயிகள் நாசம் செய்ததாக வீடியோவுடன் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு
இந்த வீடியோவை ஆய்வு செய்த NewsMobile, வீடியோவின் கீஃப்ரேம்களை கூகுள் லென்ஸ் மூலம் ஆராய்ந்ததில், இந்த வீடியோவின் முழுமையான பதிவு, ஜனவரி 12, 2021 தேதியன்று @PagdiSinger என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டது தெரியவந்தது. தற்போது பகிரப்பட்டு வைரலாக்கப்படும் வீடியோ PagdiSinger பயனர் பகிர்ந்த வீடியோவின் ஒரு பகுதி எனவும் கண்டறியப்பட்டது.
மேலும், வைரலான அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், மேடையின் பின்புறத்தில் “கிசான் மகாபஞ்சாயத்” என எழுதப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வார்த்தையினை கூகுளில் ஆராய்ந்ததில் “கிசான் மகாபஞ்சாயத் மேடை நாசமாக்கப்பட்டது” என்ற தலைப்புடன் பதிவுகளையும், செய்திகளையும் காணமுடிந்தது.
அதேபோல், ஜனவரி 10, 2021 அன்று ‘The Week’ என்ற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த செய்தியில், “கர்னால் நகரில், கைம்லா கிராமத்தில் நடைபெற இருந்த ‘கிசான் மகாபஞ்சாயத்’ எனும் கூட்டம் ஹரியானா முதலமைச்சர் (முன்னாள்) மனோகர் லால் கட்டார் தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால், மத்திய அரசின் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து, மனோகர் லால் கட்டார் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தி வீக்கின் படத்தை வைரல் காட்சிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் , ஒரே மாதிரியான ஒற்றுமைகளைக் கண்டறிந்தோம்.
இது போன்ற பல செய்தி ஊடகங்கள் ஜனவரி 2021 இல் நடந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டன.
எனவே, 2021-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கட்டாரின் இடத்தில் நடந்த நாசகர சம்பவத்தைக் காட்டும் வீடியோ பொய்யான செய்திகளுடன் தற்போது பரப்பப்படுகிறது என்று உறுதியாகக் கூறலாம்.
Note: This story was originally published by NewsMobile and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….










