புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில்…

புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமாக இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடைபெற்றது.

மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பபட்டன. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டம் தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணல்
குவாரி தமிழக முழுவதும் எடுத்து நடத்தி வருகிறார். இந்த குவாரிகளில் விற்பனை
செய்யப்படும் மணல் விற்பனையில் முறைகேடு செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த
பணத்தில் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கிடைத்த ஆதாரத்தின்
அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வீடு
அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்

அதன் தொடர்ச்சியாக கந்தர்வகோட்டை அருகே உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான செம்மண் குவாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.