மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கூகி பழங்குடியைச் சேர்ந்த 2 பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், வன்முறை சற்று தணிந்த நிலையில், தற்போது மீண்டும் கலவரம் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் காலை 8.20-க்கு நிகழ்ந்துள்ளது.
செப்டம்பர் 8 அன்று தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள பல்லேல் என்ற இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் வன்முறை தொடர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.