இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் ஆயிரத்து 430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் 310 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மட்டும் 1206 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தல்: (3 மணி நிலவரம்) LiveUpdate
இந்த நிலையில் ஈரோடு வாக்குப்பதிவு நிலவரத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேரலை மூலமாக கண்காணித்தார். வாக்குப்பதிவு சீரான முறையில் நடைபெறுகிறதா? முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்: ”தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் கைது செய்யப்படுவார்கள். ஆதாரத்தோடு புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதால் மாலை வரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து உள்ளோம். 1400 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. 700 வாக்காளர்கள் உள்ள பூத்தில் கூட்டம் சற்று குறைவாக உள்ளது .
இதனையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தலை காணொலி மூலம் கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!
மாலை மணிக்குள் வரும் அனைவருக்கும் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஈவிஎம் வாக்கு இயந்திரம் 100% நம்பகத் தன்மையானது . ஆதாரமற்ற புகார் கூறும் நபர் காவல்துறையில் ஒப்படைக்கப்படுவார் . உண்மையில் தவறு நடந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
– யாழன்







