ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த் 80 சதவீத தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் தற்போது நெருக்கடி நிலை காலக்கட்டம் போன்று உள்ளதாகவும் அக்கட்சியின் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், தொண்டர்கள் புடைசூழ சிபிஐ அலுவலகத்தில் இன்று மணீஷ் சிசோடியா நேரில் ஆஜரானார். மணீஷ் சிசோடியா ஆஜராவதை முன்னிட்டு டெல்லியின் தெற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள், மணீஷ் சிசோடியாவிடம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அண்மைச் செய்தி: 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி
இந்நிலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், கிட்டத்தட்ட 80 சதவீத ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், மத்திய அரசு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. தடுப்பு காவல் என்பது ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே வைத்திருக்கமுடியும். அவர்கள் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆகிறது. இது சட்டவிரோதமானது என்று தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டர்கள் என்பதை விளக்க வேண்டும். எங்களது மாவட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது சரியாக போக்கு அல்ல என்று சவுரப் தெரிவித்துள்ளார்.