“24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!

“எந்தவித ஐயத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேட்டுபாளையம் செல்வதற்காக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமான மூலம் கோவை…

“எந்தவித ஐயத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மேட்டுபாளையம் செல்வதற்காக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமான மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேசிய அவர்,

நேற்று நீலகிரி storng ரூமின் சிசிடிவி கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது. தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள், இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்கிறது.  சிசிடிவி வேலை செய்யாததற்கு காலசூழல் எனச் சொல்கிறார்கள். சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் ஒன்றும் ஊட்டியில் இல்லை. எந்த காரணமும் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

மேலும் எந்தவித ஐயத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டு உள்ளது. இதில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள், பாஜக வாக்காளர்களின் பெயர்கள்
விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை,தென் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என தேர்தல்
ஆணையம் விளக்கி இருக்கிறது.  இது உச்ச நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.  இந்தியா கூட்டணியினர் தோல்வி பயத்தில் இதனை சொல்கிறார்கள்.’ என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.