ரத்னம் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். தாமிரபரணி, பூஜை திரைப்படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்த மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!
இதையடுத்து, மாஸ், ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக ஏப்ரல் 26 ஆம் தேதி வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரத்னம் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
திரைப்படம் வெளியாகுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு திரைப்படத்தின் பாடலான ‘டோண்ட் வரி டா மச்சி’ மற்றும் ‘எதனால’ உள்ளிட்ட இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின், வெளியான இத்திரைப்படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.








