தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு…!

தேர்தல் ஆணையமானது தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.

அதே போல் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கி விட்டுள்ளன. கள நிலவரத்தை பொருத்த வரை தமிழ் நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையடுத்து தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையமானது தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.