10 லட்சம் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை – காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!

குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்து டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நவம்பர் 1ம் தேதி முதல் 2027 ஜனவரி 31ம் தேதி வரை, பிஎஸ்-6 (BS-VI) மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தலைநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இதனால் குருகிராம், ஃபரிதாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியங்களில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.